Type Here to Get Search Results !

உலகை உலுக்கிய நிலச்சரிவு-சற்று முன் வரை 25 பேர் பலி-பலர் வீடுகளோடு மண்ணுக்கடியில் மாயம்

 

இந்தோனேசியாவில் மேற்கு ஜாவா மாகாணம் புரங்ரங் மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 25 பேர் பலியாகியுள்ளார். இந்த நிலச்சரிவில் 97 பேரும் 34 வீடுகளு மண்ணுக்குள் புதைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மண்ணுக்குள் புதைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், ஏற்கனவே 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் மேலும் 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால், இந்தோனேசியா நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, நிலச்சரிவில் மாயமான எஞ்சிய 72 பேரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad