அடுத்த 36 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் வகையில் வானிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, அடுத்த 36 மணி நேரத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்றும் அறிவித்துள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் காலை வேளையில் உறைபனி பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல், மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் மூடுபனி நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
