தகவல்களைக் கண்டறிவதன் அவசியம் மற்றும் அது தொடர்பான தரவுகளைச் சேகரிக்க கணக்கெடுப்பை நடத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 'முழு நாடுமே ஒன்றாக', தேசிய செயற்பாட்டுச் சபையின் மூன்றாவது அமர்வின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு எதிராக, பாரிய சமூக தாக்கத்தையும் அழுத்தத்தையும் ஏற்படுத்த வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.அதன்படி, நாட்டின் எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் அழிவிலிருந்து மீட்டெடுக்க அனைவரும் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டுமென, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டின் பௌதீக வளர்ச்சியைப் போன்று சமூகத்தின் நலன் மற்றும் ஸ்திரத்தன்மை மிகவும் முக்கியம் என்றும், தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை இந்த நாட்டிலிருந்து ஒழிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.முழு நாடுமே ஒன்றாக', தேசிய செயற்பாட்டுச் சபையின் மூன்றாவது அமர்வின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு எதிராக, பாரிய சமூக தாக்கத்தையும் அழுத்தத்தையும் ஏற்படுத்த வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை,2025 ஜனவரி முதலாம் திகதி முதல் 2026 ஜனவரி 5 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், 1,821 கிலோ 174 கிராம் ஹெரொயின் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன், 3,865 கிலோ 710 கிராம் ஐஸ், 17,189 கிலோ 377 கிராம் கஞ்சா, 38 கிலோ 958 கிராம் கோகேன் மற்றும் 4,049,569 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
