தொழிலாளர்களின் குறைந்தபட்ச வேதனத்தில் இன்று முதல் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படுத்தப்படுகிறது. இலங்கையின் தேசிய குறைந்தபட்ச மாத வேதனம் 30 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது. குறைந்தபட்ச நாளாந்த வேதனம் 1200 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த வேதனம், வருகை கொடுப்பனவுடன் சேர்த்து அதிகரிக்கப்பட்ட 1750 ரூபாய் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
