சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் உள்ள வென்னப்புவ, நைனமட பகுதியில் ஜின் ஓயாவில் குதித்து உயிரிழந்த யுவதியின் மரணம் நீரில் மூழ்கியதால் நிகழ்ந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. சம்பவத்தில் உயிரிழந்த யுவதியின் பிரேத பரிசோதனையை சிலாபம் பொது வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரி டி.கே. விஜேவர்தன மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், யுவதியின் மரணம் நீரில் மூழ்கியதால் ஏற்பட்ட பிற காரணங்களால் நிகழ்ந்துள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளார். கடந்த 28 ஆம் திகதி வென்னப்புவ, ஜின் ஓயா பாலத்திற்கு வந்த யுவதியொருவர் தனது காதலனுக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்திய பின்னர் ஜின் ஓயாவில் குதித்து உயிரிழந்திருந்தார்.
