வெனிசுலா மீதான அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பிறகு இடம்பெற்ற முதல் வர்த்தகங்களில், எண்ணெய் விலை சற்று சரிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்த இந்த வார இறுதியில் அமெரிக்க இராணுவ நடவடிக்கையை எண்ணெய் வர்த்தகர்கள் பெரும்பாலும் புறக்கணித்து வருவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், அமெரிக்க எரிபொருள் விலை சடுதியாக குறைந்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. சுமார் அரைசதவீதத்திற்கு இந்த விலைக்குறைவு பததிவாகியுள்ளது. வார இறுதியில் இந்த நிலை ஏற்பட்டதால் சர்வதேச எண்ணெய் வர்த்தகர்களுக்கு அமெரிக்காவின் நகர்வால் ஏற்பட்ட இந்த மாற்றத்திற்கு எதிர்வினையாற்ற முடியாமல் இருந்ததாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதற்கிடையில், உலகளாவிய அளவுகோலான பிரெண்ட் கச்சா எண்ணெய், பீப்பாய்க்கு 22 சென்ட்ஸ் அதாவது 0.4வீதம் சரிந்து 60.53 டொலராக பதிவாகியுள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் கணிசமாக பாதிக்கும் என வர்த்தகர்கள் எதிர்பாராத நிலையில் இந்த மாற்றம் சர்வதேச ரீதியில் ஒரு சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெனிசுலா உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்பைக் கொண்டிருந்தாலும், அது ஒரு நாளைக்கு சுமார் ஒரு மில்லியன் பீப்பாய்களை மட்டுமே உற்பத்தி செய்கிறது.
