வாகன இறக்குமதி மீண்டும் தடையா-சற்று முன் வெளியான அறிவிப்பு

 

வாகன இறக்குமதி மீது மீண்டும் தடை விதிக்கப்படும் என உண்மைக்குப் புறம்பான தகவல்கள் பரவியதன் காரணமாக கடந்த ஆண்டு வாகன இறக்குமதி எதிர்பார்த்த இலக்கை விடவும் அதிகரித்ததாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் கடந்த ஆண்டு வாகன இறக்குமதி எதிர்பார்த்த இலக்கை விடவும் அதிகரித்ததன் காரணமாக நாட்டின் வெளிநாட்டு பொருளாதாரத் துறையில் அழுத்தம் ஏற்பட்டது.


வாகன இறக்குமதி மீதான தடைகள் மீண்டும் விதிக்கப்படும் என உண்மைக்குப் புறம்பான தகவல்கள் ஊடகங்களில் பரவியமையும் இதற்குக் காரணமாக உள்ளது.


டிட்வா சூறாவளி தாக்கத்திற்கு முன்னதாக மேற்கொண்ட கணிப்புகளின்படி, 2026ஆம் ஆண்டில் பணவீக்கம் படிப்படியாக உயர்வடைந்து, ஆண்டின் இரண்டாம் பாதியில் இலக்கை எட்டும் என தெரியவந்திருந்தது. இந்த நிலையில் இயற்கை பேரழிவுகள் காரணமாக பணவீக்கத்தில் உயர்வு மற்றும் இறக்கம் ஆகிய இருவகை அபாயங்களும் உள்ளன என தெரிவித்துள்ளார்.


இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post