2026 ஆம் ஆண்டில் அரச பாடசாலைகளுக்கான விடுமுறை குறித்து கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தவகையில், அரசாங்க பாடசாலைகள் நாளை (21) முதல் மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, முதல் தவணையின் முதல் கட்டம் நாளை (21) முதல் பெப்ரவரி 13 வரை நடைபெறும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது. பெப்ரவரி 14 முதல் மார்ச் 2 வரை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் மார்ச் 3 முதல் ஏப்ரல் 10 வரை நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
