வாகன இலக்க தகடுகள் தொடர்பில் சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்

 

மோட்டார் சைக்கிள்கள் உட்பட புதிதாகப் பதிவு செய்யப்பட்ட இரண்டரை இலட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு இன்னும் இலக்கத்தகடுகள் வழங்கப்படவில்லை என மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. நீண்ட காலமாக இலக்கத் தகடுகளை வழங்கி வந்த நிறுவனத்துடனான ஒப்பந்தம் ஏப்ரல் 30, 2024 அன்று முடிவடைந்ததையடுத்து பொருத்தமான சேவை வழங்குநர் இல்லாததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அடுத்து வரும் மூன்று மாதங்களுக்குள் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை வழங்க முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. அமைச்சரவை ஒப்புதலுடன் ஒரு புதிய வழங்குனர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஒப்பந்தம் கடந்த வாரம் கையெழுத்திடப்பட்டுள்ளதால், மார்ச் மாதத்திற்குள் இலக்கத்தகடுகளை வழங்க முடியும்.


கடந்த ஆண்டு (2025) ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 2,54,817 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 68,047 மோட்டார் கார்கள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், கடந்த ஆண்டு டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் மட்டும் 17,332 முச்சக்கர வண்டிகள், 6,936 இரட்டை பயன்பாட்டு வாகனங்கள், 2,642 கெப் வண்டிகள், 2,096 பஸ்கள் மற்றும் 6,027 ஏனைய வாகனங்கள் என மொத்தம் 3,62,100 வாகனங்கள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.


قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post