டித்வா சூறாவளி மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 63 சிறு தொழில்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு இழப்பீடு கூட்டுறவுத்துறை பிரதி அமைச்சரால் வழங்கி வைக்கப்பட்டது. வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது வவுனியாவில் டித்வா சூறாவளி மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட 63 பேருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் வீதம் 12.6 மில்லியன் ரூபாய் நிதி வழங்கி வைக்கப்பட்டது. கூட்டுறவு துறை பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, வவுனியா மாவட்ட செயலாளர் பி.ஏ. சரத்சந்திர ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் கலஞ்சலி டி.அருணாசாந்தா, வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் காஞ்சன குமார, தொழில் முயற்சியாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்
