சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நீண்ட நாட்களுக்குப் பிறகு குறைந்துள்ளமை நகைப்பிரியர்களுக்கு மகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தவகையில் சென்ன்னையில் இன்று (30) பவுனுக்கு ரூ.4,800 குறைந்து ரூ.1,29,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. .சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில், டிச.15-ம் தேதி ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.1 லட்சத்து 120-க்கு விற்கப்பட்டது. அதன்பிறகு, தங்கம் விலை தொடர்ந்து படிப்படியாக உயர்ந்து வந்தது. நேற்று ஒரே நாளில் ரூ. 9,520 உயர்ந்து வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த நிலையில் இன்று (ஜன.30) சென்னையில், ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.4,800 குறைந்துள்ளது. ஒரு பவுன் தங்கம் ரூ.1,29,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.16,200 ஆக உள்ளது. தொடர்ந்து உயர்ந்து வந்த தங்க விலையில் இந்த சரிவு வாடிக்கையாளர்கள் மத்தியில் சற்றே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.10 குறைந்து, ரூ.415 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.10,000 குறைந்து, ரூ.4 லட்சத்து 15 ஆயிரமாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
