வட மாகாணம் உள்ளிட்ட பகுதியில் நெல் விற்க காத்திருக்கும் விவசாயிகளுக்கு அரசாங்கம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் நெல் சந்தைப்படுத்தல் சபையினூடான நெற்கொள்வனவு ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் கே.டீ.லால்காந்த தெரிவித்துள்ளார். கமத்தொழில், கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கூட்டம் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற போதே அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.வன்னி உட்பட வடக்கு கிழக்கில் பெரும்போக நெல் அறுவடை இடம்பெற்றுவரும் நிலையில், நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக நெற்கொள்வனவை விரைந்து ஆரம்பிக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முன்வைத்த கோரிக்கைக்குப் பதில் வழங்கும் போதே, அமைச்சர் கே.டீ.லால்காந்த இதனைக் கூறியுள்ளார்.அமைச்சுசார் ஆலோசனைக்குழு கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஊடகங்களுக்கு கருத்துரைத்தார்.
