2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை, பெப்ரவரி 17ஆம் திகதி முதல் பெப்ரவரி 26ஆம் திகதி வரை நடைபெறும். இந்த வருடத்தின் இறுதி தேசிய பரீட்சையான 2026 கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை டிசம்பர் 8ஆம் திகதி முதல் டிசம்பர் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட 2025ஆம் ஆண்டு உயர்தரப் பாடங்களை ஜனவரியில் முடிப்பதும், 2026ஆம் ஆண்டு சாதாரண தர பரீட்சையை வருட இறுதிக்குள் நடத்துவதும் தேசிய பரீட்சைகள் நாட்காட்டியை அதன் வழக்கமான அட்டவணைக்கு மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும் என தெரிவிக்கப்படுகிறது
