காதலனுடன் இரண்டு குழந்தையின் தாய் அடிக்கடி உல்லாசம்.. ஒரே இரவில் விடாமல் 4 பேர் மாறி மாறி.. துடிதுடித்து பிரிந்த உயிர்..

 


காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள புதுநல்லூர் பகுதியில் கள்ளக்காதல் விவகாரம் வெளியானதால், 28 வயது இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவரின் கணவர் கார்த்தி (30) என்பவர், அதே பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கும் பிரியங்கா (28) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 7 வயது பெண் குழந்தையும், 5 வயது ஆண் குழந்தையும் உள்ளனர். கார்த்தி அருகிலுள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.

கார்த்தி வேலைக்குச் சென்ற நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த பிரியங்கா, அக்கம் பக்கத்தினருடன் பழகி வந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான முருகன் என்பவருடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. முருகனுக்கு ஏற்கனவே ஜோதி என்ற மனைவியும் குழந்தைகளும் உள்ளனர். நாளடைவில் இவர்களது பழக்கம் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியது. கார்த்தி வீட்டில் இல்லாத நேரங்களில் முருகன் பிரியங்காவுடன் தனிமையில் இருந்து வந்துள்ளார். இதை அறிந்த முருகனின் மனைவி ஜோதி, கணவரை கண்காணித்தபோது இந்த தகாத உறவு தெரிய வந்தது. கோபமடைந்த ஜோதி, இதைப் பிரியங்காவின் கணவர் கார்த்தியிடம் தெரிவித்தார். இருவரும் சேர்ந்து முருகனையும் பிரியங்காவையும் கண்டித்தனர். குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த உறவை கைவிடுமாறு வலியுறுத்தினர். அப்போது பிரியங்கா, ஜோதியிடம் அசிங்கமாக பேசியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. அப்போது ஜோதி, அனைவரின் முன்னிலையிலும் “இன்னொருத்தி புருஷன் கூட உடலுறவு வச்சிகிட்டு இருக்கியே... வெட்கமா இல்ல?” என்று கேட்டு பிரியங்காவை கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இப்படி, கணவன், மனைவி நான்கு பேரும் மாறி மாறி தகராறி ஈடுபட்டுள்ளனர். தன்னுடைய தகாத உறவு விஷயம் பொதுவெளியில் தெரிந்ததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான பிரியங்கா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தவறான முடிவை செய்து கொண்டார். மனைவியின் உடல் தொங்கிக் கொண்டிருப்பதை கண்ட அதிர்ச்சியடைந்த கார்த்தி, உடனடியாக சோமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த சோமங்கலம் காவல்துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரு சிறு குழந்தைகளை விட்டுச் சென்ற இந்த தற்கொலை சம்பவம், புதுநல்லூர் மற்றும் சுற்றுப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. குடும்ப உறவுகளில் ஏற்படும் விரிசல்கள் எவ்வளவு கொடிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இச்சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post