யாழ்ப்பாணம் பருத்தித் துறை சாரையடியைச் சேர்ந்த திருகோணமலை/விபுலானந்தா கல்லூரி முன்னாள் ஆசிரியையும் இறுதியாக கன்னியா இராவணேஸ்வராவில் கடமையாற்றிய 44 வயதான குடும்பப் பெண் மாதங்கி சிவகுமார் அவர்கள் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார். பெண்களுக்கு உண்டாகும் புற்றுநோய்கள் தொடர்பாக அவதானத்துடன் கூடிய மருத்துவப் பரிசோதனைகளை 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மேற்கொள்வது அவசியமாகும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.
