கனடா செல்ல காத்திருப்பவர்களுக்கு சற்று முன் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு

 

கனடாவில் சுகாதாரம் மற்றும் வேளாண்மை துறைகளில் பணியாற்ற விரும்பும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வேலை அனுமதி (Work Permit) விரைவாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்கும் முக்கிய நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. கனடாவின் குடியேற்ற அமைப்பு(IRCC), செவிலியர்கள், வைத்தியர்கள், மருந்தாளர்கள், ஆய்வக நிபுணர்கள் போன்ற சுகாதாரத் துறையினருக்கு மற்றும் பண்ணை மேற்பார்வையாளர்கள், இறைச்சி வெட்டுநர்கள், மீன் மற்றும் கடல் உணவு தொழிற்சாலை பணியாளர்கள் போன்ற வேளாண்மைத் துறையினருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், LMIA அடிப்படையிலான வேலை அனுமதி, Francophone Mobility Work Permit, International Experience Canada போன்ற employer-specific அனுமதிகள் விரைவாக செயல்படுத்தப்படுகின்றன. ஆனால் Post-Graduation Work Permit போன்ற open permits இதில் சேர்க்கப்படவில்லை. மேலும், குறைந்தது ஆறு மாத அனுபவம் உள்ளவர்கள் Express Entry மூலம் Permanent Residency (PR) பெறுவதற்கும் கூடுதல் வாய்ப்பு பெற்றுக் கொள்வார்கள். குறிப்பாக சுகாதாரத் துறையினர்கள் குறைந்த Comprehensive Ranking System (CRS) மதிப்பெண்களுடனும் Invitation to Apply (ITA) பெற முடியும். கனடா அரசு இதன் மூலம் தொழிலாளர் பற்றாக்குறையை குறைத்து, திறமையான குடியேற்றத்தை ஊக்குவிப்பதாகவும், சுகாதாரம் மற்றும் வேளாண்மை துறைகளில் பணியாளர்கள் விரைவாக சேர்ந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது. இந்த புதிய திட்டம், வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை எளிதாக்குவதோடு, நிரந்தர குடிவரவுக்கான பாதையையும் திறக்கிறது. இதன் மூலம் இந்தியா இலங்கை உள்ளிட்ட பல நாடுகளின் தொழிலாளர்களுக்கு பெரிய வாய்ப்பு உருவாகும்.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post