மிரள வைக்கும் தங்கத்தின் விலை - தங்கக் கையிருப்பில் அதிரடி மாற்றம்

 

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக அதிகரித்தமையால், மத்திய வங்கி வசமுள்ள தங்கக் கையிருப்பின் பெறுமதியும் அதிகரித்துள்ளது. தினந்தோறும் உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வரும் நிலையில் அதற்கு இணையாக உள்நாட்டுத் தங்கத்தின் விலையும் அதிகரித்து வருகின்றது. உலக சந்தையில் நேற்றைய தினம் தங்கத்தின் விலை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அதன்படி, உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,041 டொலராக பதிவாகியுள்ளது.கடந்த ஜனவரி மாதத்தில் இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்புச் சொத்துக்களின் அளவு 6.82 பில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது, 2025 டிசம்பர் மாத இறுதியில் பதிவாகியிருந்த 6.83 பில்லியன் டொலர் கையிருப்புடன் ஒப்பிடுகையில் 0.2 சதவீத சிறிய வீழ்ச்சி என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இலங்கை மத்திய வங்கியின் தங்கக் கையிருப்பு 2025 டிசம்பரில் காணப்பட்ட 86 மில்லியன் டொலர்களிலிருந்து, 2026 ஜனவரியில் 109 மில்லியன் டொலர்கள் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. இது, 21.6 சதவீதத்தினால் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது.


قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post