Type Here to Get Search Results !

திருமலையை உலுக்கிய சோகம்-பிரபல பாடசாலை ஆசிரியர் விபத்தில் சம்பவ இடத்திலே பலி

 

உளவு இயந்திரம் மோதியதில் கிண்ணியா பாடசாலை ஆசிரியர் உயிரிழப்பு..! கிண்ணியா கற்குழி சந்தியில் நேற்று (01) மதியம் இடம்பெற்ற கோர விபத்தில், பாடசாலை ஆசிரியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, இன்று பகல் சுமார் 12.00 மணியளவில் கிண்ணியா கற்குழி சந்திக்கு அருகில் வீதியோரமாக தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு மற்றுமொருவருடன் பேசிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வான் எல பகுதியில் இருந்து பெட்டியுடன் (Trailer) அதிவேகமாக வந்த உளவு இயந்திரம் (Tractor) கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் கிண்ணியா இடிமனைப் பகுதியைச் சேர்ந்த முகமது சாலிகின் முகமது மவுஜூத் (வயது 58) என்ற பாடசாலை ஆசிரியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உளவு இயந்திரத்தை ஓட்டி வந்த சாரதி கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக வான்எல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். உயிரிழந்த ஆசிரியரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிண்ணியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad