யாழில் 12 வயது சிறுமி இளம் பிக்குவால் பாலியல் துஸ்பிரோகம்-வெளியான திடுக்கிடும் தகவல்

 

யாழில் சிறுமியை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் நாவற்குழி இளநிலை பிக்கு கைது!​யாழ்ப்பாணம் | நாவற்குழி யாழ். நாவற்குழி விகாரையில் சிறுமி ஒருவர் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான முக்கிய தகவல்கள்.... சம்பவம் என்ன? நாவற்குழி விகாரை வளாகத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் (Filter Water) தண்ணீர் எடுப்பதற்காகச் சென்ற 12 வயது சிறுமியே, அங்கு புதிதாக வந்திருந்த இளநிலை பிக்குவினால் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.​நீதிமன்ற நடவடிக்கை... பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் சாவகச்சேரி பொலிஸாரால் குறித்த பிக்கு உடனடியாக கைது செய்யப்பட்டார். நேற்று சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அவரை, வரும் ஏப்ரல் 10-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார். தற்போதைய நிலை... பாதிக்கப்பட்ட சிறுமி மேலதிக மருத்துவப் பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிஸார் மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post