குறைந்த வருமானம் உடையவர்கள் மற்றும் இடர்நிலைக்கு முகம் கொடுத்துள்ள பிள்ளையுடைய குடும்பங்களுக்கு முறையான தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
தகுதியான ஒரு பயனாளிக்கு அதிகபட்சமாக 20 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
அதற்கமைய, முறையான தங்குமிட வசதி இல்லாத, 18 முதல் 45 வயதுக்குட்பட்ட, நிறுவனப் பராமரிப்பிலிருந்து வெளியேறிய நபர்கள், உறுதியான வருமானம் இல்லாத காரணத்தால் பிள்ளைகளுடன் பாதுகாப்பற்ற நிலையில் வாழும் குடும்பங்களும் இதற்குத் தகுதியுடையவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சமூகத்துடன் மீள இணைய முடியாமல் தற்போதும் சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் தங்கியிருக்கும் 16 முதல் 18 வயதுடைய இளைஞர், யுவதிகளும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, முறையான தங்குமிட வசதி இல்லாத, 18 முதல் 45 வயதுக்குட்பட்ட, நிறுவனப் பராமரிப்பில் இருந்து வெளியேறிய நபர்கள், உறுதியான வருமானம் இல்லாத காரணத்தால் பிள்ளைகளுடன் பாதுகாப்பற்ற நிலையில் வாழும் குடும்பங்களும் இதற்கு தகுதியுடையவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.