இன்று முதல் மின்சாரக் கட்டணம் அதிரடி உயர்வு ; வெளியான முழுமையான விபரங்கள்

 

நாட்டில் இன்று முதல் மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, வீட்டுப்பாவனை, கைத்தொழில் மற்றும் அரச நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளுக்கான கட்டணங்களும் வெவ்வேறு விகிதங்களில் அதிகரிக்கப்பட்டுள்ளன.


குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்தும் நுகர்வோர் முதல் அதிகப்படியான பாவனையாளர்கள் வரை அனைவருக்குமே இந்தக் கட்டண உயர்வு சுமையை ஏற்படுத்தியுள்ளது:

30 அலகுகளுக்கு கீழ்: 4.3% அதிகரிக்கப்பட்டு, ஒரு அலகுக்கான கட்டணம் 15 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


30 - 60 அலகுகள்: 6.9% அதிகரிக்கப்பட்டு, ஒரு அலகு 45 ரூபாயாக வசூலிக்கப்படும்.


61 - 90 அலகுகள்: 6.9% அதிகரிக்கப்பட்டு, ஒரு அலகு 120 ரூபாயாக உயர்ந்துள்ளது.


91 - 180 அலகுகள்: 7.2% கட்டண உயர்வு அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், இதற்கான கட்டணம் 420 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


180 அலகுகளுக்கு மேல்: ஆகக்கூடிய அளவாக 25% கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.


பொருளாதாரத்தின் முக்கியத் தூண்களாகக் கருதப்படும் ஏனைய துறைகளுக்கும் கட்டணங்கள் பின்வருமாறு உயர்த்தப்பட்டுள்ளன.


கைத்தொழில் துறை: 8.7% உயர்வு. விருந்தகங்கள் (Hotels): 9.9% உயர்வு. அரச நிறுவனங்கள்: 14.4% உயர்வு. மதஸ்தலங்களைப் பொறுத்தவரை, 180 அலகுகளுக்குக் குறைவான மின்சாரப் பாவனைக்கு எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.


எனினும், 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் மதஸ்தலங்களுக்கு 9.6% கட்டண உயர்வு அமுல்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய மின்னுற்பத்தி செலவுகளைக் கருத்திற்கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post