கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகத் தடைப்பட்டிருந்த சேவைகளை மீள ஆரம்பிப்பதற்கான விசேட அறிவித்தலை ஆட்பதிவுத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த மார்ச் 23, 24 மற்றும் 26 ஆம் திகதிகளில் பத்தரமுல்ல பிரதான அலுவலகம் அல்லது மாகாண அலுவலகங்களுக்கு வருகை தந்து, கணினி கோளாறு காரணமாக தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போனவர்களுக்கு மாத்திரம் இன்று (30) ஒருநாள் சேவையின் கீழ் அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளன. நாளை (31) முதல் பத்தரமுல்ல பிரதான அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களில் ஒருநாள் சேவை வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதான மற்றும் மாகாண அலுவலகங்களின் சாதாரண சேவைகள் ஏப்ரல் 06 முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.தகவல் சரிபார்ப்பு மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பு உள்ளிட்ட ஏனைய சேவைகள் தற்போது மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே முன்னெடுக்கப்படுகின்றன.எனவே, அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் இதற்காக மாற்று வழிகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. கணினி அமைப்பு முழுமையாகச் சீர்செய்யப்பட்ட பின்னர் அனைத்துச் சேவைகளும் தடையின்றி முன்னெடுக்கப்படும் என ஆட்பதிவுத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
