திடீரென அதிகரித்த தங்கத்தின் விலை நகைப்பிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு

 

சர்வதேச சந்தையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை திடீரென அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.


அதன்படி ஒரு அவுண்ஸ் தங்கவிலை 4,493.79 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.


முதலாம் இணைப்பு

கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 358800 ரூபாவாக பதிவாகியுள்ளது.


அதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 390000 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,400 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் தங்க விலை உலக சந்தை விலை அமெரிக் டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி காரணமாக தளம்பல் நிலையை பதிவு செய்து வருகிறது.

2026ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் தங்க விலை பொதுவாக உயர்வு போக்கில் இருந்தது, சில நாட்களில் குறிப்பிடத்தக்க ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டன.  


இந்த நிலையில் அண்மையில் வரலாறு காணாத அதிகரிப்பை பதிவு செய்த நிலையில் மீண்டும் மளமளவென விலை குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து தற்போது 4 இலட்சத்தை அண்மித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 



இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post