நொடிப்பொழுதில் 23 பேரின் உயிரை பறித்த சம்பவம் ; தமிழ்நாட்டை உலுக்கிய பெரும் அனர்த்தம்

 

தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் உள்ள 'வனஜா' பட்டாசு ஆலையில் நேற்று(19) ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிக்கி இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாக்பூரில் உள்ள பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பின் உரிமம் பெற்ற இந்த ஆலையில், 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.மூலப்பொருட்களைக் கையாளும் முன் வீட்டின் முன் அறை பகுதியில் ஏற்பட்ட வெடிப்பு, அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவி கட்டிடங்களைத் தரைமட்டமாக்கியுள்ளது.

மீட்புப் பணியின்போதும் மீண்டும் வெடி விபத்து ஏற்பட்டதில் தீயணைப்பு வீரர்களும் காயமடைந்தனர்.

காயமடைந்த 6 பேரில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ள நிலையில், அவர்களுக்கு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் தப்பியோடிய ஆலை உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்தச் சம்பவத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post