சாவகச்சேரி விபத்து: ஒருவர் உயிரிழப்பு சாவகச்சேரி நுணாவில் சந்தி பகுதியில் வியாழக்கிழமை (23.04.2026) இரவு இடம்பெற்ற கடும் வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற உந்துருளியும், யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் உந்துருளியை ஓட்டிச் சென்ற 44 வயதான குருநகர் பகுதியைச் சேர்ந்த செல்வம் ரொபின் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. பாரவூர்தி சாரதி கைது செய்யப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் நாளை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
