ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் ராஜாவாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். அப்படி சூரியன் ராசியை மாற்றும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன.
தற்போது சூரியன் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஏப்ரல் 14 ஆம் திகதி சூரியன் மேஷ ராசிக்குள் நுழையவுள்ளார். மேஷ ராசியில் சூரியன் நுழையும் போது தான் தமிழ் புத்தாண்டான பராபவ வருடமும், சித்திரை மாதமும் பிறக்கிறது.இந்த பராபவ வருடத்தின் முதல் மாதமான சித்திரை மாதத்தில் மிகவும் மங்களகரமான குபேர யோகம் உருவாகவுள்ளது. குபேர யோகமானது சூரியன் மற்றும் செவ்வாயின் சேர்க்கையால் உருவாகும். இவ்விரு கிரகங்களும் நட்பு கிரகங்களாகும். இந்த சுப யோகம் செல்வத்தை அள்ளித் தரும்.
எந்த ராசிக்கு இந்த யோகம் உள்ளதோ, அந்நபர் செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியின் பரிபூர்ண ஆசியை பெறுவார்கள். இப்போது தமிழ் புத்தாண்டில் உருவாகும் குபேர யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்:மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இக்காலத்தில் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளிலும் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வெற்றி கிடைக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்களுக்கு எதிர்பாராத அளவில் நல்ல லாபம் கிடைக்கும். வணிகர்கள் தங்கள் வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள்.
சிம்மம்: இந்த ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். அதிர்ஷ்டத்தால் ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். உறவினர்களிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். எப்பேற்பட்ட சவால்களையும் சமாளிக்கும் திறன் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
துலாம்: இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கும். பணியிடத்தில் இதுவரை சந்தித்த பிரச்சனைகள் நீங்கும். வேலையில் இருந்த தடைகள் அனைத்தும் விலகும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பண வரவு அதிகரிக்கும். இதனால் நிதி நிலைமை இருமடங்கு உயரும். வாழ்க்கை செழிப்பாக இருக்கும்.
தனுசு: இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் அதிர்ஷ்டத்தின் ஆதரவை பெறுவார்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி, நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். குபேரரின் அருளால் பண வரவு சிறப்பாக இருக்கும்.
