இளம் பெண்ணின் வங்கிக்கணக்கில் குவிந்துள்ள பணம்; போதைப்பொருள் கடத்தல்காரியாம்!

பிலியந்தலையில் போதைப்பொருள் கடத்தல்காரி ஒருவரின் வங்க்கி கண்க்கில் பெரும் தொகை பணம் வைப்பு செய்திருந்த நிலையில், குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த 9 கோடியே 37 லட்சத்து 62 ஆயிரத்து 939 ரூபாய் பணத்தை இரண்டு வங்கிகளில் வைப்புச் செய்திருந்த போதைப்பொருள் கடத்தல்காரி ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்துள்ளது.சம்பவத்தில் பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவருடைய ஒரு கணக்கில் 7,37,62,939.95 ரூபாயும், மற்றொரு கணக்கில் 20,000,000 ரூபாயும் வைப்புச் செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post