ஈரானின் புரட்சிகர காவல்படையினரால் (IRGC) முன்னர் வைக்கப்பட்ட கடல் கண்ணிவெடிகளை அகற்றி, அந்த முக்கிய நீர்வழியை முழுமையாகப் பாதுகாப்பானதாக மாற்றுவதற்காக 'யுஎஸ்எஸ் ஃபிராங்க் இ. பீட்டர்சன்' மற்றும் 'யுஎஸ்எஸ் மைக்கேல் மர்பி' ஆகிய இரண்டு ஏவுகணை அழிப்புக் கப்பல்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.இது குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க மத்திய கட்டளை தளபதி அட்மிரல் பிராட் கூப்பர், "இன்று நாங்கள் ஒரு புதிய பாதுகாப்பான பாதையை உருவாக்கும் பணியைத் தொடங்கியுள்ளோம்.வணிகக் கப்பல்கள் தடையின்றி செல்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த பாதுகாப்பான வழித்தடம் குறித்த தகவல்கள் விரைவில் கடல்சார் தொழில்துறையினருடன் பகிர்ந்து கொள்ளப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.இந்த வாரம் போர்நிறுத்தம் எட்டப்பட்ட போதிலும், கண்ணிவெடி அச்சுறுத்தல் காரணமாக இதுவரை சுமார் 30 கப்பல்கள் மட்டுமே இந்த நீரிணையை கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.கண்ணிவெடிகளை அகற்றும் முயற்சிகள் ஒருபுறம் நடந்தாலும், ஈரான் ஏவுகணைகளை ஏவக்கூடும் என்ற அச்சுறுத்தல் இன்னும் நீடிப்பதானது, கப்பல்களைப் பாதுகாப்பதிலும் நீரிணையின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் அமெரிக்காவுக்கு பெரும் சவாலாகவே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

