அமெரிக்க டொலர் 22.9 மில்லியன் கடனைச் செலுத்த வேண்டியிருந்த ஒரு நாட்டிற்கு, கடன் தவணையாக திறைசேரியினால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் தொகை, கணினி ஹெக்கர் ஒருவருக்குச் சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
நேற்று (22) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்குப் பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, இது தொடர்பான விடயங்களை உள்ளடக்கி சபாநாயகருக்குக் கடிதம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.அதற்கமைய, இது குறித்து ஆராய்ந்து விசாரணைகளை முன்னெடுப்பதா இல்லையா என்பது குறித்து சபாநாயகர் தீர்மானம் எடுப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.
