இலங்கையில் இன்றும் தங்கவிலை வீழ்ச்சியடைந்துள்ளமை நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்து வருகிறது.
அதன்படி ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,672 டொலராக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 74 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.இதேவேளை இலங்கையிலும் இன்று(24) தங்கவிலை 2000 ரூபாயால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 394,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 362,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,312 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
