மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு

 


பொல்கஹவெல, பங்களாவத்தை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்தனர். 

இவ்வாறு உயிரிழந்தவர்கள் எஹெலியகொட பிரதேசத்தைச் சேர்ந்த 28 மற்றும் 35 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

பயிர் நிலத்தை வனவிலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

இச்சம்பவம் தொடர்பாக, குறித்த காணியின் காவலாளியாகப் பணியாற்றிய ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொல்கஹவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post