கொழும்பில் தமிழர் அதிகம் வாழும் பகுதியில் துணிகரம்; காட்டிக் கொடுத்த CCTV


 கொழும்பு தெஹிவளை பகுதியில் வயோதிபர் ஒருவரைத் தாக்கி பணம் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாகத் தேடப்பட்டு வந்த சந்தேகநபர், கைது செய்யப்பட்டுள்ளார்.

தெஹிவளை வைத்தியா வீதியில் வைத்து கடந்த 17 ஆம் திகதி 74 வயதுடைய வயோதிபர் ஒருவர் மர்ம நபரால் தாக்கப்பட்டு, அவரிடமிருந்த 2,100 ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டது.சந்தேகநபர் வயோதிபரை நிலத்தில் தள்ளி கொடூரமாகத் தாக்கிவிட்டு தப்பிச்செல்லும் காட்சிகள் அப்பகுதியிலிருந்த சிசிடிவி (CCTV) கமெராவில் பதிவாகியிருந்தது.

இச்சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வந்த தெஹிவளை காவல்துறை குற்றத்தடுப்புப் பிரிவினர், சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் சந்தேகநபரை அடையாளம் கண்டு கைது செய்தனர்.கைதானபோது சந்தேகநபரிடமிருந்து 5,200 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது. சந்தேக நபரை இன்று(20)கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளதுடன் , தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post