பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள ஆபத்து

 


பாடசாலைகள், அரச நிறுவனங்கள், பணியிடங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களில் டெங்கு நோய் பரவும் வேகம் அதிகரித்துள்ளமை பூச்சியியல் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூகநல மருத்துவ நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

நாட்டில் இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் 29589 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் 2026 மே 18 ஆம் திகதி வரையிலான தரவுகளின்படி 15 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன. அதிக ஆபத்துள்ள 39 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதனுடன், மேல் மாகாணத்திலேயே அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதனைத் தொடர்ந்து தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் காணப்படுகின்றன.

மாவட்ட ரீதியாகப் பார்க்கும்போது, நாட்டின் 25 மாவட்டங்களிலும் டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருகின்றனர்.

அவற்றில் குறிப்பாக கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, மாத்தறை, காலி, களுத்துறை மற்றும் கண்டி மாவட்டங்களில் அதிகளவிலான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். 

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post