வாகன இறக்குமதிகள் மீது அரசாங்கம் விதித்துள்ள புதிய வரித் திருத்தம், நாட்டில் வாகனங்களின் விலையை கணிசமாக அதிகரிக்கும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஜனாதிபதி வெளியிட்ட புதிய வர்த்தமானி அறிவிப்பின்படி, இறக்குமதி செய்யப்படும் அனைத்து வாகனங்களுக்கும் சுங்க வரியின் மீது ஐம்பது சதவிகித கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மனேஜின் கூற்றுப்படி, “இந்தப் புதிய வரியானது 16ஆம் திகதி(நேற்று - 16.05.2026) முதல் தொடங்கப்படும் அனைத்து கடன் கடிதங்களுக்கும் (LC) பொருந்தும் என்றும், அத்திகதிக்கு முன்னர் தொடங்கப்பட்ட கடன் கடிதங்களைப் பாதிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
