கம்பளை பகுதியில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக கம்பளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இன்று (16) காலை இந்த சம்பவம் நேர்ந்துள்ளதுடன், முச்சக்கரவண்டியில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாகவே இந்தத் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கம்பளை காவல்துறையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து உடனடியாகச் செயற்பட்டு தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
இந்த விபத்தினால் எவருக்கும் காயங்களோ அல்லது உயிராபத்துகளோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கம்பளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
.jpeg)