அக்கரைப்பற்று மத்திய கல்லூரி அருகில் உள்ள வீதியில் இரண்டு சிறுவர்கள் காரை வேகமாக ஓட்டிய வந்து இருவர் மீது மோதியுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸாரிடம் வினவிய போது பொலிஸார் சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும் விபத்துக்குள்ளாகிய இருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிறுவர்கள் எவ்வாறு காரை எடுத்துச் சென்றார்கள் என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுவர்களைக் கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
