இலங்கை வலுசக்தி அமைச்சு வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தற்போது சந்தையில் விற்பனை செய்யும் எரிபொருட்களினால் பாரிய அளவிலான கட்டமைப்பு நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாத இறக்குமதி விலைகளின் அடிப்படையில், மானியங்கள் எதுவும் கணக்கில் சேர்க்கப்படுவதற்கு முன்னரே ஒவ்வொரு லிட்டர் எரிபொருளிலும் ஏற்படும் நஷ்டம் மிக அதிகமாகக் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக, சாதாரண பொதுமக்களாலும் போக்குவரத்துத் துறையினாலும் அதிகம் பயன்படுத்தப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றுக்கு கூட்டுத்தாபனம் பெருமளவு நஷ்டத்தைத் தாங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு லிட்டர் பெட்ரோல் 92 ரக எரிபொருளை சந்தைக்குக் கொண்டு வருவதற்கான இறக்குமதிச் செலவு 273.59 ரூபாயாகவும், அதற்கான வரி 136.58 ரூபாயாகவும் காணப்படுகிறது.
இதன் மூலம் அதன் உண்மையான சூத்திர விலை 432.59 ரூபாயாக இருக்க வேண்டும் என்ற போதிலும், அது 398 ரூபாய்க்கே விற்பனை செய்யப்படுவதால் ஒரு லிட்டருக்கு 34.59 ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. இதேபோல், பெட்ரோல் 95 ரகத்தில் ஒரு லிட்டருக்கு 22.46 ரூபாய் நஷ்டம் பதிவாகியுள்ளது
.jpeg)