கொழும்பு - ஹோமாகம, பிடிபன தெற்கு பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து இராணுவச் சிப்பாய் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றுமுன்தினம் (15.05.2026) பிடிபன தெற்கு பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதைக் கண்ட பொது மக்கள், உடனடியாக ஹோமாகம பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு விசாரணைகளை முன்னெடுத்தனர்.
சம்பவம் தொடர்பாக நீதிவான் விசாரணைகள் மற்றும் மரண பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து ஹோமாகம பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
