இலங்கையில் ஏற்பட்ட யுத்தம் அதனை தொடர்ந்து ஈஸ்டர் தாக்குதல் அதனை தொடர்ந்து கொரானா தொற்று கடந்த வருடம் ஏற்பட்ட டிட்வா புயல் காரணமாக நாட்டின் பொருளாதாரம் கேள்விகுறியாகியுள்ளது.
ஆட்சி மாற்றத்தை நோக்கி மக்கள் புதிய அரசாங்கத்திற்கு வாக்களித்தனர். ஆனால் ஜனாதிபதியை தவிர மற்றவர்கள் செயற்படுகின்றார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஈரான்- அமெரிக்க யுத்தத்தின் பின்னர் உலகளாவிய ரீதியில் எரிபொருளின் விலை அதிகரித்துள்ளது.
எனவே இலங்கையால் அதனை சமாளிக்க முடியுமா, அதற்கான தீர்வு என்ன? இந்தியாவில் நரேந்திர மோடி பல அறிவித்தல்களை முன்வைத்துள்ளார், தனது பாதுகாப்பினை கூட குறைத்துள்ளார். கடந்தவாரம் ஜனாதிபதி பெட்ரோலின் விலை 700 ரூபாவிற்கு அதிகமாக விற்க வேண்டிய நிலை உள்ளது.
இந்தநிலையில், இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியை நோக்கி நகர்கின்றது என்றுகொழும்பு பல்கழைக்கழகத்தின் பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்தார்.
மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும், இலவசங்களை நம்பி வாழ்ந்தால் இதே நிலை தொடரும் என குறிப்பிட்டார்.
.jpeg)