ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் கைப்பற்றல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உடன்படிக்கை ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு வீழ்ச்சியடைந்துள்ளதை அடுத்து, உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை 3 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
அதன்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3.54 டொலர்கள் (3.35%) அதிகரித்து, 109.26 டொலர்களாக பதிவாகியுள்ளது.
அதேநேரம், WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 4.25 டொலர்கள் (4.2%) அதிகரித்து, 105.42 டொலர்களாக பதிவாகியுள்ளது.
ஈரான் போரில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தம் நிலையற்றதாகக் காணப்படும் சூழலில், கடந்த ஒரு வார காலத்தில் பிரெண்ட் எண்ணெய் விலை 7.84 சதவீதத்தாலும், WTI எண்ணெய் விலை 10.48 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளன.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான வார்த்தைப் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளதுடன், தற்காலிக போர்நிறுத்தம் நீடித்த போதிலும், ஹோர்முஸ் நீரிணை விரைவாகத் திறக்கப்படும் என்ற நம்பிக்கை மங்கியுள்ளதாக கொமர்ஸ்பேங்க் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
.jpeg)