எரிபொருள் விலையில் உயர்வு!

 

அடுத்த சில நாட்களில் எரிபொருள் விலையில் கணிசமான உயர்வு இருக்கும் என்று தென்னிலங்கையின் பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ கூறியுள்ளார்.

குறிப்பாக ஒரு லிட்டர் டீசலின் விலை 600 ரூபாயாக உயரக்கூடும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தென்னிலங்கை கூடகம் ஒன்றுக்கு வழங்கிய மேற்படி கருத்துக்களை வெளியிட்ட அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்

டீசல் விலை ரூ. 600 வரை உயர்ந்திருக்க வேண்டும். மே 6 ஆம் திகதி தரவுகளின்படி, பெட்ரோல் விலையும் குறைந்தபட்சம் ரூ. 20 முதல் ரூ. 30 வரை அதிகரிக்க வேண்டும்.

ஆனால், மானியம் வழங்குவதன் மூலம் இதை ஓரளவிற்குச் சமன் செய்ய முடியும்.

இப்போது எண்ணெய் விலை உயர்த்தப்படாவிட்டால் ரூபாயின் மதிப்பு குறையும். ரூபாயின் மதிப்பு குறைந்தால் என்ன நடக்கும்? எண்ணெய் விலை அதிகரிக்கும்.

இந்தச் சுழற்சி இதற்கு முன்பும் நடந்துகொண்டிருக்கிறது. அதுதான் பொருளாதார நெருக்கடிக்கான பாதை.

அது பணவீக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், எண்ணெய் விலை உயர்த்தப்படாமல் ரூபாயின் மதிப்பு குறைந்தால், அது பணவீக்கத்தில் இன்னும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்” என கூறியுள்ளார்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post