சுயவிருப்பத்துடன் பாலியல் தொழிலில் ஈடுபடுவது சட்டபூர்வமானது - உச்ச நீதிமன்றம்!
➤ இந்தியாவில் சுயவிருப்பத்துடன் பாலியல் தொழிலில் ஈடுபடுவது சட்டபூர்வமானது என்றும், அத்தகைய பாலியல் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
➤ பாலியல் தொழிலாளர்களை குற்றவாளிகளாகப் பார்க்கக்கூடாது என்றும் அவர்கள் ஒப்புதல் இல்லாமல் மறுவாழ்வு செயல்முறைக்கும் கட்டாயப்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
➤ பாலியல் தொழிலுக்காக கடத்தப்பட்ட பெண்கள், மீட்கப்பட்ட பின் மறுவாழ்விற்கான வழிகாட்டுதல்களை அமைத்து தரக் கோரும் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது. அதோடு பெண்களை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது தண்டனைக்குரிய குற்றம் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியது.
