எண்ணெய் விலையில் அதிரடி மாற்றம்

 


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வருவதைப் பற்றித் தான் கவலைப்படவில்லை என்றும், எண்ணெய் விலை உயர்வு குறித்துத் தனக்கு எவ்வித கவலையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ட்ரம்பின் இந்த அறிக்கை வெளியாகத் தொடங்கியதிலிருந்து, சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்து, 100 டொலர் என்ற இலக்கைத் தாண்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்றைய வர்த்தகத் தொடக்கத்தில் இதன் விலை 100 டொலருக்கும் குறைவாகவே காணப்பட்டது.

தற்போது நிலவும் போதிய இருப்பு இன்மை (Lack of stock) காரணமாக,மசகு எண்ணெய்யின் விலை ஒரு பீப்பாய் 150 அல்லது 160 டொலர் வரை உயர்வதற்குக் கடுமையான சாத்தியக்கூறுகள் உள்ளதாக முன்னணி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஒருவர் எச்சரித்துள்ளார்.

எண்ணெய் விலை இந்த அளவுக்கு உயர்ந்தால், அது உலகப் பொருளாதாரத்தில் பாரிய தாக்கங்களையும் கடுமையான நெருக்கடிகளையும் ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post