இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சிறைக்கலவரங்களை முழுமையாகக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாட்டின் அனைத்துச் சிறைச்சாலைகளின் பாதுகாப்பையும் பலப்படுத்துவதற்குத் தேவையான உடனடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டிலுள்ள அனைத்துச் சிறைச்சாலைகளுக்கும் பாதுகாப்பை வழங்கும் வகையில் பொலிஸாரையும், பொலிஸ் விசேட அதிரடிப் படையினரையும், முப்படையினரையும் உடனடியாகப் பணியில் ஈடுபடுத்துவதற்கான உத்தியோகபூர்வ உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்று சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
