உலகப் புகழ்பெற்ற மல்யுத்த வீரரான ஜோன் சீனா, இன்று (21) நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கோடி ரோட்ஸை (Cody Rhodes) வீழ்த்தி 17 ஆவது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
இதன் மூலம் அவர் WWE உலக சாம்பியன்ஷிப்பை அதிக முறை வென்ற வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
தொழில்முறை மல்யுத்தத்திலிருந்து, ஜோன் சீனா இந்த ஆண்டு டிசம்பரில் ஓய்வு பெற இருப்பதால் இந்த வெற்றியானது முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.