என்ன சொல்றீங்க! இந்த காரணங்களுக்காக கருமுட்டையை உறைய வைத்த நடிகைகள்.. இத்தனை பேரா?

 

கருமுட்டையை உறைய வைத்து நீண்ட காலத்துக்கு பாதுகாத்து வரும் பாலிவுட் நடிகைகள் யார் யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம். 

ஏக்தா கபூர்: சரியான துணையை தேர்தெடுப்பதில் அதிக டென்ஷன் எடுத்துக்கொள்ளாமல், அவசரம் இல்லாமல் நிதானமாக சரியான துணையை தேர்நதெடுக்கவேண்டும் என்பதற்காக திரைப்பட தயரிப்பாளர் ஏக்தா கபூர், தனது 36ம் வயதில் கருமுட்டையை உறைய வைத்தார். பின்னர் தனது 43ம் வயதில் உறைய வைத்த கருமுட்டையை வைத்து வாடகை தாய் மூலம் குழந்தையை பெற்றெடுத்தார்.

தனிஷா முகர்ஜி: பாலிவுட் நடிகை கஜோலின் தங்கையும், நடிகையுமான தனிஷா முகர்ஜி, தனது 39 வயதில் கருமுட்டையை உறைய வைத்தார். எப்போது நான் தாய்மை அடைய விரும்புகிறேனோ அப்போது உறைந்த கருமுட்டையை வைத்து நான் குழந்தை பெற்றுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

சோஃபி சௌத்ரி: நடிகையும், பாடகியுமான சோஃபி சௌத்ரி தனது 30வது வயதில் கருமுட்டையை உறைய வைத்துள்ளார். தனது பேஷனில் அதிக கவனம் செலுத்தி வரும் சோஃபி, குழந்தை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் இல்லாததால் பின்னர் பெற்றுக்கொள்ளலாம் என கருமுட்டையை உறைய வைத்துள்ளார்.

ராக்கி சாவந்த்: பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த், தனது 36ம் வயதில் கருமுட்டையை உறைய வைத்துள்ளார். பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் நான் எப்போது தயாராகிறேனோ அப்போது குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன் என கூறியுள்ளார்.

மோனா சிங்: பாலிவுட் நடிகை மோனா சிங், தனது 34ம் வயதில் கருமுட்டையை உறைய வைத்துள்ளார். மேலும் பெண்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் எனவும் தெரிவித்துள்ளார்.

ஸ்வேதா திவாரி: பாலிவுட் நடிகை ஸ்வேதா திவாரி, தனது 30வது வயதில் கருமுட்டையை உறைய வைத்துள்ளார். இவர் தனது கருமுட்டையை உறைய வைப்பதற்கு முன் ஏற்கனவே இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

கனிகா கபூர்: நடிகை கனிகா கபூர், தனது 30வது வயதில் கருமுட்டையை உறைய வைத்துள்ளார். திருமணமாகி விவாகரத்துக்கு பின்னர் கருமுட்டையை உறையவைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் காலத்தில் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள இது உதவும் என கூறியுள்ளார்.

திவ்யா தத்தா: 37வது வயதில் தனது கருமுட்டையை உறைய வைத்துள்ளார் பாலிவுட் நடிகை திவ்யா தத்தா. சினிமா மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை சமமாக கொண்டுசெல்ல இவ்வாறு செய்வதாக கூறியிருந்தார்.

சுஷ்மிதா சென்: பிரபஞ்ச அழகி போட்டியில் டைட்டில் வென்றவர் நடிகை சுஷ்மிதா சென். ஏற்கனவே இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வரும் சுஷ்மிதா, வரும் காலங்களில் குழந்தையை பெற்றுக்கொள்ள கருமுட்டையை உறைய வைத்துள்ளார்.

நயன்தாரா: பாலிவுட் நடிகையாக மாறியுள்ள நடிகை நயன்தாரா, தனது 30வது வயதில் கருமுட்டையை உறைய வைத்தார். இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்ட பின் உறைய வைத்த கருமுட்டையை வைத்து வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார்.

பிரியங்கா சோப்ரா: ஸ்டார் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தனது 30வது வயதில் கருமுட்டையை உறைய வைத்தார். நிக் ஜோனாஸ் என்பவரை திருமணம் செய்துகொண்ட பின் வாடகை தாய் மூலம் பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.


இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post