வடக்கு பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட பேருந்து விபத்தொன்றில் 4 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்ததோடு பலர் காயமடைந்துள்ளனர்.
பிலிப்பைன்ஸின் பரபரப்பான நெடுஞ்சாலைகளில் ஒன்றான டோல் கேட்டில் நேற்றையதினம்(01.05.2025) ஒரு பேருந்து பல வாகனங்களை மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, பேருந்தை செலுத்திய சாரதி பிலிப்பைன்ஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணையில், பேருந்தை செலுத்திக் கொண்டிருந்த போது, சாரதி தூங்கிவிட்டதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், விபத்துடன் தொடர்புடைய பேருந்தை வைத்துள்ள நிறுவனத்தின் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.