யாழ் காரை நகரில் அதிகாலை 3.30 மணியளவில் இருந்து மின் தடை ஏற்பட்டுள்ளது.
காரைநகர் பகுதியில் வீசி வரும் பலத்த காற்றினால் சின்ன ஆலடி பகுதியில் இருந்த ஒரு பனை மரம் முறிந்து மின்சார வயரில் விழுந்தமையே மின் தடைக்கான காரணம் என தெரியவருகிறது.
மின்சார சபையினர் அப்புறபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிடப்படுகிறது.
காலை 10.30 க்கு மின்சாரம் வழமைக்கு வரும் என குறிப்பிடுகிறார்கள்.
போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.