வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த சுற்றுலா பயணி ஒருவரிடமிருந்து, பறக்கும் விமானத்தில் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய சீனாவை சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து செய்யப்பட்டுள்ளார்.
அபுதாபியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேற்று வந்த விமானத்திலேயே இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட சுற்றுலா பயணியினால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, விமான தரையிறங்கியதும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.