வெசாக் பௌர்ணமி தினத்தை குறிவைத்து, பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி, மோசடிகள் இடம்பெற்று வருகின்றன.
அதற்கமைய, இலவச இணைய வசதிகள் மற்றும் 50GB Data வழங்குவதாகக் கூறி, மோசடி தகவல் ஒன்று வேகமாகப் பரவி வருவதாக இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இவை அனைத்தும் போலியானவை எனவும், அவ்வாறு தகவல்கள் வரும் செயலிகளில் யாரும் தங்கள் தனிப்பட்ட தரவை உள்ளிடக்கூடாது என இலங்கை பொலிஸார் தங்கள் பேஸ்புக் கணக்கில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளனர்.